மதுரை துணை மேயர் பதவி- சுயேச்சைகளுக்கு அதிமுக, திமுக வலைவீச்சு
சென்னை:
அழகிரி ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்கள் இணைந்ததையடுத்து பலமடைந்துள்ள திமுக, மதுரை மாநகராட்சி துணைமேயர் பதவியைக்கைப்பற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிற சுயேச்சை கவுன்சிலர்களையும் வலைக்க திமுக வலைவிரித்துள்ளது.
இருப்பினும் அதிமுகவும் இந்த சுயேச்சைகளை எப்படியாவது தனக்கு ஆதரவாகத் திருப்ப களத்தில் இறங்கியுள்ளதால் பெரும் இழுபறி நிலைநீடிக்கிறது.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அழகிரியின் ஆதரவாளர்களான 3 சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.இதையடுத்து மதுரை மாநகராட்சியில் திமுகவின் பலம் 30 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து துணைமேயர் தேர்தலில் இன்னும் சிலசுயேச்சைகளைப் பிடிட்ததால் வெற்றிபெற்று விடலாம் என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளது. துணை மேயர் பதவியைப் பிடிக்க 37கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 72 வார்டுகளில் திமுக 27 இடங்களிலும் அதன் தோழமைக் கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி 2 வார்டுகளிலும் ஜெயித்தன.
அதிமுக கூட்டணியில் அதிமுக 22 இடங்களிலும், தமாகா 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் ஜெயித்துள்ளன.
இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இந்த இருகட்சிகளும் மாநில அளவில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.
இப்போதைய நிலையில் திமுக கூட்டணியிடம் மொத்தம் 29 கவுன்சிலர்கள் உள்ளனர்.
அதிமுக கூட்டணி வசம் 28 பேர் உள்ளனர்.
இதனால் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்றவர்கள் தான் துணை மேயராக முடியும்.
இதையடுத்து சுயேச்சைகளுக்கு வலைவிரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு பலலட்சங்களை அள்ளி வழங்க தயாராக இருப்பதால் சுயேச்சைகளின் மவுசு கூடியுள்ளது.
யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்குத் தான் சுயேச்சைகள் ஆதரவளிப்பார்கள் என்ற நிலையில் மதுரையில் கரைவேட்டிகள்பெட்டிகளுடன் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
யாருக்கு வெறி என்பது 31ம் தேதி தெரியும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications