ஸ்டாலினைப் பாதுகாக்க புதிய சட்டம்- முரசொலி மாறன் தீவிரம்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் பதவியேற்றாலும், மன்றத்தில் திமுகவுக்குப் பெரும்பான்மைகிடைக்காததால் அதிமுக கவுன்சிலர்களை கட்டுப்பாட்டில் வைக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் திமுக மேயர் பதவியை வென்றுள்ளது. மற்ற மாநகராட்சிகளில்அதிமுக 3 இடங்களிலும், தமாகா 1 இடத்திலும் வென்றுள்ளது.
இதில் சேலத்தை தவிர மற்ற 5 மாநகராட்சிகளிலும் மேயர் பதவியை வென்ற கட்சிக்கு மன்றத்தில் பெரும்பான்மைகிடைக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்குத் தான் பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இதில் எதிர்கட்சிகளின் முக்கிய இலக்காகக் கருதப்படும் சென்னையில் ஸ்டாலின் மேயராக வெற்றி பெற்றாலும்,அதிமுக மற்றும் தமாகாதான் அங்கு மெஜாரிட்டியாக உள்ளன. இதனால் ஸ்டாலினை செயல்படவிடாமல்அவருக்கு பெரும் சிக்கல்களை அதிமுக ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் டெல்லியில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணித் தலைவர்களைச்சந்தித்து பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறாராம்.
பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமல்படுத்தப்பட்டால் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து மேயரேதீர்மானிக்க முடியும். அதற்கு உறுப்பினர்களின் ஒப்புதலோ, மாநில அரசின் ஒப்புதலோ தேவையில்லை.
ஆனால், தற்போது இந்தத் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்துக்குமட்டும் அதுவும் ஸ்டாலினுக்குப் பிரச்சனை என்ற நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுகேட்டால் அது தவறாக இருக்கும் என்று கருதி திமுக தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அனைத்து மாநிலங்களிலும், இதை நிறைவேற்றுமா மத்திய அரசிடம் மாறன் வலியுறுத்தி வ வருவதாகக்கூறப்படுகிறது.
ராஜிவ் காந்தி தான் முதன்முதலில் பஞ்சாயத்துத் ராஜ் சட்டத்தைக் கொண்டு வர முயன்றார். அதை திமுக கடுமையாகஎதிர்த்தது என்பது நினைவுகூறத் தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications