திமுகவுக்கு வாக்களித்த மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டிய அமைச்சர்
விழுப்புரம்:
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணியத்தின் சொந்த ஊரில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால்ஆத்திரம் அடைந்த அதிமுகவினர், அந்த ஊர் காலனியைச் சேர்ந்த தலித் மக்களை ஊரைவிட்டே விரட்டிஅடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சின்னக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிதிராவிடநலத்துறை அமைமச்சர் சுப்ரமணியம். இந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு அமைச்சரின் தம்பிநெடுஞ்செழியன் போட்டியிட்டார்.
திமுக சார்பில் இப்பதவிக்கு சுதாகர் என்பவர் போட்டியிட்டார். சுதாகருடன் பேச்சு நடத்திய அமைச்சர் சுதாகரைபோட்டியிலிருந்து வாபஸ் வாங்க வைத்தார்.
பின்னர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு நடந்த தேர்தலில் சின்னக்குப்பம்கிராமத்தில் உள்ள காலனி மக்கள் வாக்களித்த வார்டில், திமுகவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், கடந்த 22ம் தேதி காலனிக்குள் புகுந்து அப் பகுதியில்வசித்து வந்த ஏழை தலித் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.
மேலும் ஒன்றிய கவுன்சிலுக்கு திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் மற்றும் அவரது மாமியார் வசந்தாஆகியோரது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தக் கலவரத்தைப் பார்த்துப் பீதியடைந்த காலனி மக்கள், தங்கள் வீடுகளைக் காலிசெய்துவிட்டு பக்கத்துகிராமமான மேட்டுப்பாளையத்துக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதுகுறித்தப் போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவோம் என்று அதிமுகவினர் மிரட்டியதால், அந்தஅப்பாவிப் பொதுமக்கள் போலீசுக்கும் தகவல் கொடுக்காமல் கடந்த ஒரு வாரமாக பக்கத்து ஊரில் வசித்துவருகிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications