திருப்பூர்: அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்த 2 பெண்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருப்பூர் அருகே நடுரோட்டில் பஸ்சிலிருந்து குதித்த இரு பெண்கள் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பி மீது காலைவைத்ததில் மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலியானார்கள்.

திருப்பூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையிலிருந்து, கோவை சிங்காநல்லர் செல்லும் பஸ் வேலப்பநாயக்கன்ரோட்டில் சென்றுகொண்டிந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதில் ரோட்டின் குறுக்கேமின்கம்பி அறுந்து கிடந்தது.

இதை அந்த பஸ்சின் டிரைவர் பார்த்துவிட்டடார்.

பஸ்ஸை நிறுத்திய அவர் பயணிகளிடம், மின்கம்பி அறுந்து கிடப்பதையும் யாரும் பஸ்ஸில் இருந்துஇறங்கவேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ஆனால், ஏதோ நடக்கப் போவதாக பயந்த பல பயணிகள் பஸ்சிலிருந்து குதித்தனர். இதில்குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் மின்கம்பி மீது கால் வைத்ததால், அவர் தூக்கி வீசடப்பட்டு பஸ் டயரில் அடிபட்டுஇறந்தார். அதே போல வாரப்பட்டியைச் சேர்ந்த ருக்மணி என்ற பெண் குதித்த இடம் மழை பெய்து ஈரமாக இருந்ததால் அறுந்து கிடந்தமின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு அவரும் மரணமடைந்தார்.

மேலும் அந்த பஸ்ஸில் இருந்து குதித்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பழனியம்மாள், வேலுமணி,கன்னியம்மாள், அப்புக்குட்டி, நல்லான், வெள்ளியங்கிரி ஆகியோர் மீதும் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர்கள் காயத்துடன் உயர் தப்பினர்.

இவர்கள் அனைவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+