முஸ்லீம் மதத்திற்கு மாற முயன்ற 60 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் தங்களுக்கு அடிப்படைஉரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து முஸ்லீம் மதத்திற்கு மாற எடுத்த முடிவை அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழிக்கு பின் கைவிட்டனர்.
காஞ்சிபுரம் அருகில் உள்ளது கூத்தரம்பாக்கம். இங்கு வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்முஸ்லீம் மதத்திற்கு மாற முடிவெடுத்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. சங்கரன், திமுக கவுன்சிலர் அசோக்குமார் மற்றும் பல உயர் அதிகாரிகள்கூத்தரம்பாக்கம் சென்று மதம் மாற முடிவெடுத்திருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து தங்கள் மத மாற்ற முடிவை தாழத்தப்பட்டசமுதாய மக்கள் கைவிட்டனர்.
இது குறித்து ஆர்.டி.ஓ. சங்கரன் கூறியதாவது:
4 வருடங்களுக்கு முன்பே ஏலத் தொகையை செலுத்திய பின்பும் தங்களுக்கு உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதிமறுக்கப்படுகிறது என்றும், உள்ளூர் கோவில் விழாக்களில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,குடிநீருக்கான ஒரே ஆதாரத்திலும் குடிநீர் எடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை.
அடிப்படை உரிமைகளே எங்களுக்கு மறுக்கப்படுவதால் நாங்கள் மதம் மாற முடிவெடுத்தோம். பல சிறுபான்மைதலைவர்களும் இது குறித்து எங்களை அணுகி வருகிறார்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறினர்.
இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக நாங்கள் கூறிய உறுதிமொழியையடுத்து அவர்கள் மதம் மாறும் முடிவைமாற்றிக் கொண்டனர் என்று சங்கரன் கூறினார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டே மாவட்ட நிர்வாகம் உறுதி மொழி அளித்தது. தற்போதுஅதிகாரிகள் மீண்டும் உறுதி மொழி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications