சாட்சி சொல்ல வந்த ரவுடியை வெட்டிக் கொன்ற ரவுடிகள்: தாதா வீரமணிக்கு வலைவீச்சு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்திருந்த ரவுடியை கடத்திய போட்டிரவுடிக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இது தொடர்பாக அயோத்திக் குப்பம் தாதா வீரமணி உள்ளிட்ட நான்கு பேரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் அப்பகுதியில்ரவுடியாக இருந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் உள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சி சொல்வதற்காகசண்முகம் வந்திருந்தார். அப்போது வெடிகுண்டு வழக்கு ஒன்று தொடர்பாகஅயோத்திக்குப்பம் வீரமணி (திமுக பேரணியின்போதுஏற்பட்ட வன்முறைக்குக்காரணம் இவர்தான் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்)கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில்வந்திருந்தனர்.
சாட்சி சொல்ல வந்த சண்முகத்தை பார்த்தவுடன் வீரமணி கும்பலைச் சேர்ந்த 4 பேர்அவரை அங்கிருந்து டாடா சுமோ கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு அவரை சரமாரியாகஅரிவாள்களால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சண்முகத்தை அங்கேயேபோட்டுவிட்டு அக்கும்பல் அங்கிருந்து சென்றது.
படுகாயமடைந்த சண்முகம் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஆட்டோ ஒன்றைப்பிடித்தராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகவல் கிடைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார்விரைந்து வந்தனர். அவர்களிடம் தன்னைத் தாக்கியது வீரமணி, செந்தில், ராமு, குமார்ஆகியோர்தான் என்று சண்முகம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications