மேயர் தேர்தலை மிஞ்சும் துணை மேயர் தேர்தல்
சென்னை:
மேயர் தேர்தலை விட பரபரப்பான சூழ்நிலையில் 6 மாநகராட்சிகளுக்கான துணை மேயர் தேர்தல்நடைபெறவுள்ளது.
தமிழகத்திலுள்ள 6 மாநகராட்சிகள் மற்றும் 102 நகராட்சிகளின் துணை மேயர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் புதன்கிழமை நடக்கிறது. மறைமுகத் தேர்தலாக நடக்கும் இந்த தேர்தலில் யாருக்குவெற்றி கிடைக்கும் என்பது உறுதியாக கூற முடியாத அளவுக்கு மிகப் பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.
எந்தக் கட்சிக்கும் சரியான, உறுதியான மெஜாரிட்டி மாநகராட்சியிலும் இல்லை, நகராட்சியிலும் இல்லை.
மாநகராட்சிகளைப் பொருத்தவரை அனைத்து மாநகராட்சிகளிலும் குழப்பம் நீடித்து வருகிறது. சென்னைமாநகராட்சியில் அதிமுக கூட்டணிக்கு 82 கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. திமுக கூட்டணிக்கோ 65 பேர்மட்டுமே உள்ளனர்.
இருப்பினும் திமுக சார்பில் துணை மேயர் தேர்தலில் சண்முகவள்ளி என்பவர் போட்டியிடுவார் என்று திமுகஅறிவித்துள்ளது. அதிமுக சார்பில் கராத்தே தியாகராஜன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
மதுரையைப் பொருத்தவரை திமுக உறுதியாக ஜெயிக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு வரை நிலவரம் இருந்தது.ஆனால் முன்னாள் துணை மேயர் "மிசா" பாண்டியன் தலைமையில் நான்கு சுயேச்சை கவுன்சிலர்கள் திடீரெனஅதிமுகவுக்குத் தாவியதால் அக்கட்சிக்கு அதிக கவுன்சிலர்கள் கிடைத்துள்ளனர்.
இதனால் தாங்கள்தான் துணை மேயர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அதிமுக கூறி வருகிறது. "மிசா"பாண்டியனே மீண்டும் துணை மேயர் தேர்தலில் நிற்கவுள்ளார். இருப்பினும், திமுக தரப்பில் சின்னச்சாமி என்பவர்நிறுத்தப்பட்டுள்ளார். திமுக தரப்பு வெற்றி குறித்து நம்பிக்கையுடன் உள்ளது.
திருச்சி மேயர் பதவி தமாகா வசம் இருந்தாலும், அக்கட்சிக்கு 2 கவுன்சிலர்களே உள்ளனர். திமுகவுக்கு கூடுதல்கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக சார்பில் அன்பழகன் என்பவர் துணை மேயர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
நெல்லையில் திமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ள நிலையில், அங்கு அக்கட்சி சார்பில் விஸ்வநாதபாண்டியன் என்பவர் போட்டியிடவுள்ளார்.
கோவை, சேலம் மாநகராட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே துணை மேயராகும் நிலை உள்ளது.
மேயர் தேர்தலின்போது இருந்த பரபரப்பை விட துணை மேயர் தேர்தலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாளைநடக்கவுள்ள துணை மேயர் தேர்தலின்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒவ்வொருஅரசியல் கட்சியும் மிகுந்த டென்ஷனில் உள்ளது.
சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜெயித்த கவுன்சிலர்கள் இப்போது கடும் டிமான்டில் உள்ளனர். "என்னவேண்டுமானாலும் கொடுக்கிறோம், எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்று சுயேச்சைகளின் பின்னால் அரசியல்கட்சிகள் பெட்டிகளுடன் அலைகிறார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications