பாக். அணு விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஒசாமா பின் லேடன் மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய 3 பாகிஸ்தான் அணு ஆயுத விஞ்ஞானிகள்அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூலமாக பின்லேடனிடம் சில அணு ஆயுதங்கள் போய்ச் சேர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுவதால்அவர்களை அமெரிக்கா தீவிரமாக விசாரித்து வருகிறது.

பாகிஸ்தானின் மூத்த அணு விஞ்ஞானி சுல்தான் பஷீருதீன் மெஹ்மூத், பாகிஸ்தான் அணு சக்திக் கமிஷனின்முன்னாள் தலைமை என்ஜினியர் அப்துல் மஜீத், இந்தக் கமிஷனின் முன்னாள் ஆராய்ச்சியாளர் மிர்ஸா யூசுப் ஆகியமூவரும் கடந்த வாரம் அமெரிக்காவின் உத்தவின்பேரில் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பின் லேடன் மற்றும் தலிபான்களுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இவர்களில் மெஹ்மூத் சில ஆண்டுகளுக்கு முன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆப்கானிஸ்தான்வளர்ச்சிக்காக உம்மா மறுசீரைமைப்பு என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்புக்குபின்லேடனும், தலிபான்களும் தான் நிதியுதவி தந்து வருகின்றனர்.

இவரும் மஜீத், யூசும் ஆகிய இருவரும் பதவியில் இருக்கும்போதே சில ஆயுதங்களை தலிபான்களுக்குக்கொடுத்திருக்கலாம் என்ற அச்சம் பரவ ஆரம்பித்துள்ளது. இப்போதும் கூட தொடர்ந்து பின் லேடனுக்கு அணுஆயுதங்கள் குறித்து இவர்கள் ஆலோசனைகள் அழித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகளிலும் பயிற்சி பெற்றவர்கள்.

பின்லேனிடம் அணு ஆயுதம் இருக்கலாம் என்று அமெரிக்காவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுஅதிகாரிகள் மூலமாகத் தான் ஆயுதங்கள் பின்லேடனிடம் போய்ச் சேர்ந்திருக்கலாம் எனவும்சந்தேகிகக்கப்படுகிறது.

இதையடுத்து இவர்களை உடனடியா கைது செய்யுமாறு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு அமெரிக்காஉத்தரவிட்டது. முதலில் பாகிஸ்தான் மறுத்தது. ஆனால், அமெரிக்க நெருக்குதல் அதிகமானதையடுத்து இவர்கள்கைது செய்யப்பட்டனர்.

இப்போது இந்த மூன்று பேரையும் விசாரிக்க எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழுஇஸ்லாமாபாத் வந்துள்ளது. இந்தக் குழுவிடம் 3 விஞ்ஞானிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான்அப்ஸர்வர் நாளிதழ் தெரிவிக்கிறது.

இவர்களில் மெஹ்மூதை பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் பலமுறை விசாரித்தனர். இவருக்கு பின்லேடனுடன் நல்லதொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனாலும் இவரை விசாரித்து விட்டோம். இவருக்கும் லேடனுக்கும்தொடர்பில்லை என்று கூறி கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விடுவித்தது.

ஆனால், பாகிஸ்தானின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா இவரை மீண்டும் கைது செய்யுமாறு நெருக்குதல்தந்தது. இதைத் தொடர்ந்து இவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மீண்டும் வீட்டிலிருந்து போலீசாரால் இழுத்துச்செல்லப்பட்டார்.

வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படும் முன் ராணுவக் காவலில் கடும் விசாரணைக்கு அவர் உள்ளாக்கப்பட்டார்.அவருக்கு அடி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடும் விசாரணை காரணமாக அவர் மன நலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் காவலில் இருந்து வெளியே வந்த அவர் யாரிடமும் பேசவில்லை, மிகவும் அதிர்ச்சியுடனும்நடுக்கத்துடனும் இருந்தார் என்றனர். விடுதலையாகி வீட்டுக்கு வந்த அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தனர். யாரையும் சந்திக்க அவருக்கு அனுமதி தரவில்லை.

இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மீண்டும் அவரை ராணுவத்தினரும் போலீசாரும் அதிரடியாகவீட்டுக்கள் நுழைந்து இழுத்துச் சென்றனர். சில நாட்களில் அவர் வீட்டுக்குத் திரும்பாவிட்டால் அவர் செத்துப்போய்விட்டார் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என போலீசார் அவரது வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றனர்.

தான் இனி வீட்டுக்குத் திரும்புவது சந்தேகம் தான் என மெஹ்மூத் தனது வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இவர்களுக்கும் பின்லேடனுக்கும் உள்ள தொடர்பை பிரிட்டிஷ் உளவுப் பிரிவும், இந்தியாவும் உறுதி செய்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+