தஜிகிஸ்தான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல்
காண்டஹார்:
தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள தலிபான் படைகள் மீது முதல்முறையாக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின.
இந்த எல்லையில் தலிபான்களின் பெரும் படை நிலை கொண்டுள்ளது. இந்தப் படைகள் மீது முதல்முதலாகஅமெரிக்க விமானங்கள் இன்று குண்டு வீசித் தாக்கின.
லேடனின் கூட்டாளிகள் சாவு:
அதே போல தலிபான்களின் முக்கிய நகரமான காண்டஹார் மீதும் அமெரிக்க விமானங்கள் இன்று பகலில் தொடர்தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று இரவில் காண்டஹாரில் நடந்த தாக்குதல்களில் பின்லேடனின் அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த 10 பேர்கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அவர் கூறுகையில், தலிபான்களின் பல ராணுவ டாங்கிகளையும், கவச வாகனங்களையும், ஆயுதக்கிடங்குகளையும் அமெரிக்கா தாக்கி அழித்தது.
நார்த்தர்ன் அலையன்சுக்கு ஆயுதங்கள்:
தலிபான்களுக்கு எதிராகப் போராடி வரும் நார்த்தன் அலையன்ஸ் படையினருக்கு அமெரிக்க ராணுவவிமானங்கள் ஆயுதங்களை விண்ணிலிருந்து பாராசூட்கள் வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications