தீவிரவாதிகள் மீண்டும் தாக்கலாம் - அமெரிக்கா அச்சம்
வாஷிங்டன்:
அடுத்த ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்று அமெரிக்காவின்அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐயும் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறுகேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பிற இடங்களில் அமெரிக்காவுக்குச் சொந்தமான இடங்களிலும் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தீவிரவாதிகள் அமெரிக்கர்களுக்குஆந்த்ராக்ஸ் பவுடர்கள் அடங்கிய தபால்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதனால் சில அமெரிக்கர்களும்இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்துஅமெரிக்கர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே நியூயார்க் நகரிலிருந்து டல்லாசுக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்ஒன்று, மிரட்டல் காரணமாக வாஷிங்டன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கியது. பயணிகள்அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அந்த விமானத்திலேயே ஒரு மிரட்டல் எச்சரிக்கைக் கடிதம் கிடந்ததையடுத்துதான் இந்த போயிங் 757 ரகவிமானம் வாஷிங்டனில் அவசரமாகத் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications