பரமக்குடி துணைத் தலைவர் தேர்தலில் திமுகவினர் முறைகேடு - தமாகா தர்ணா
பரமக்குடி:
பரமக்குடி நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் திமுகவினர் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, தமாகாவினர்தர்ணாவில் ஈடுபட்டனர்.
பரமக்குடி நகராட்சி துணைத்தலைர் பதவிக்கு நேற்று (புதன்கிழமை) தேர்தல் நடந்தது. திமுக சார்பில் முன்னாள்திமுக எம்.எல்.ஏ., திசை வீரனும், தமாகா சார்பில் மொட்டையனும் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவின்போது மொட்டையன் தனது வாக்குச் சீட்டை வாங்கித் தாமாறாகக் கிழித்துவிட்டார். இதனால்அவரது ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது.
பிறகு ஓட்டு எண்ணிக்கையின் போது திமுகவுக்கும், தமாகாவுக்கும் சம அளவில் ஓட்டுக்கள் கிடைத்தன. இதனால்குலுக்கல் முறையில் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. குலுக்கலில் திமுக வேட்பாளர் திசைவீரன்வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பைக் கேட்டதும், மொட்டையன் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து,தமாகாவினர் ஒன்று கூடி, திமுகவினர்தான் மொட்டையனின் மனநிலையைப் பாதிக்கச் செய்து, அவரை செல்லாதஓட்டுப் போட வைத்துவிட்டனர் என்று புகார் கூறினர்.
பிறகு அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications