காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரின் ரளெஜரி பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2ராணுவ அதிகாரிகளும், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 5 தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஜெளரி பகுதியிலுள்ள மோர்கா பகுதியில் நேற்று இரவு ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதுதீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் இந்தய ராணுவம்தரப்பில் லெப்டினன்ட் கவுதம் ஜெயினும், நாய்க் பகவான் சிங்கும் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு ராணுவவீரர்கள் காயமடைந்தனர்.
ராணுவத்தினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், ஒரு கை துப்பாக்கியும், 7 கை எறிகுண்டுகளும்கைப்பற்றப்பட்டன.
இதே பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
கடத்தப்பட்டவர் சுட்டுக் கொலை:
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உதம்பூர் மாவட்டம் சாஸ்னா மாவட்டத்தில் இருந்து தீவிரவாதிகளால்கடத்திச் செல்லப்பட்ட 5 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் தோடா மாவட்டத்திலுள்ள பாடேர்வாபகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு:
இந்திய - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியான ரஜெளரி, பூஞ்ச் மற்றம் ஜம்மூ பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று(வியாழக்கிழமை) இரவு முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தான் படையினர் மார்ட்டர் குண்டுகளை கொண்டும், துப்பாக்கிகளை கொண்டும் பிர்மார்கலி, கேர்னி, லாம், பாவானி, நவுஷெரா, பாலாகோட்,பலன்வாலா, மென்தார் மற்றும் கிரிஷ்னாகாடி பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் தாக்குதல் நடத்தினர்.
சில இடங்களில் 200 முதல் 300 மார்ட்டார் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக ஜாநகர் மற்றும் நவுஷெரா பகுதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதுஎன்று கூறினர். இதில் லெப்டினன்ட் எஸ்.கே.ஜாம்வாலும், ஒரு ராணுவ வீரரும் காயமடைந்தனர் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications