ஊட்டி மலைப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து
குன்னூர்:
மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தடைபட்டிருந்த குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதை ரயில்போக்குவரத்து இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் துவங்கியது.
கடந்த மாத இறுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் ஆங்காங்கே மண் சரிவுஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குச் செல்லும் மலை ரயில் பாதையில் உள்ளதண்டவாளம் 120 அடி தூரத்திற்கு மண்ணால் மூடப்பட்டு விட்டது.
இதையடுத்து, அக்டோபர் 27ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே நிறுத்திவிட்டது. இதனால் ஊட்டி செல்ல வேண்டிய சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர்.
இந்த ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியை தென்னக ரயில்வே உடனே மேற்கொண்டது. நூற்றுக்கும் மேற்பட்டபணியாளர்கள் ரயில் பாதையில் உள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினமே தண்டவாளத்திலிருந்த மண்ணை அகற்றும் பணி முடிவடைந்தது. பிறகு நேற்று இப்பாதையில்ஒரு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
இதையடுத்து, இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்துஆரம்பிக்கப்பட்டது. ஊட்டிக்குச் செல்ல முடியாமல் ஒரு வாரமாக அவதிப்பட்ட சுற்றுலா பயணிகள் தற்போதுமிகுந்த சந்தோஷத்துடன் மலைப் பாதை ரயிலில் பயணம் செய்கின்றனர்.
ஊட்டியில் குளிர் கால சீசனும் ஆரம்பித்து விட்டதால் போகப் போக ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. தற்போதே ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஊட்டிக்கு வந்துகுவிந்து கொண்டிருக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications