தேர்தல் வன்முறை: அதிமுக அரசைக் கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரதம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளுக்குக் காரணமான அதிமுக அரசைக் கண்டித்து காங்கிரசார்சென்னையில் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழககாங்கிரஸ் வர்த்தகப் பிரிவின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட காங்கிரசார்கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர், போலீசார் துணையுடன் வன்முறையில் ஈடுபட்டனர். அதற்குஎதிர்ப்புத் தெரிவித்து சாத்வீகமான முறையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.விரைவில் காமராஜர் ஆட்சி, தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்.
அதிமுகவினர் ஓட்டுப் பதிவின் போது மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின் போதே வன்முறையில் ஈடுபட்டுவந்தனர். இவர்களுக்குப் போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதிமுகஅரசின் வன்முறைப் போக்கைக் கண்டிக்கிறோம்.
வன்முறையை கையில் எடுப்பவர்கள் வன்முறைக்கே இரையாவார்கள் என்பது வரலாறு. அதுதான்அதிமுகவினருக்கும் நடக்கப் போகிறது.
திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடமிருந்து தொலை தூரத்தில் இருக்கவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நாங்கள்இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்வெளிப்படுத்தியுள்ளன
இவ்வாறு அவர் பேசினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் தமிழ் தேசக் கட்சியின் தலைவர் கண்ணப்பன்,காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்" உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தது. மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications