உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மதிமுக, பா.ம.க. ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பலத்த அடி குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், தங்களுக்கு ஜாதி ஓட்டு கூட கிடைக்காததுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் தங்களது மாநில நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.

மதிமுகவின் ஆய்வுக் குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது.

கட்சி அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.பிக்கள் ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பா.ம.கா:

தேர்தலில் பெரும் தோல்வி தழுவிய கட்சி பா.ம.க. தான். இந்தக் கட்சிக்கே உரிய வன்னியர்கள் ஓட்டு கூட பலஇடங்களில் கிடைக்கவில்லை. அதிமுக, திமுக இடையே மியூசிகல் சேர் விளையாடி கடைசியில் திமுகவில் சேர்ந்துசேலம் மேயர் தேர்தலில் போட்டியிட்டது பா.ம.க..

பா.ம.க. இளைஞர் அணிச் செயாளர் அருள் அங்கு போட்டியிட்டார். ஆனால், அங்கு பிரபலமில்லாத ஒரு அதிமுகவேட்பாளரிடம் பாட்டாளி மக்கள் கட்சி தோற்றது.

வன்னியர் ஓட்டு கூட அக் கட்சிக்குக் கிடைக்கவில்லை. அதே போல வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் கூட ஊராட்சி, நகராட்சிகளை கோட்டை விட்டுள்ளது பா.ம.க.

இதையடுத்து நேற்று பா.ம.க. செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிப் பேசினார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

இன்று பா.ம.க. செயற்குழுக் கூட்டமும் பின்னர் பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டமும் நடக்கிறது.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் பண்ணையில் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன.

தேர்தலில் மண்ணைக் கவ்வியது குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+