ஊரைவிட்டு விரட்டப்பட்ட தலித்கள்: மனித உரிமைக் கமிஷன் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் ஊரைவிட்டு விரட்டப்பட்ட தலித் மக்களை மனிதஉரிமைக் கமிஷன் நீதிபதிகள் நேரில் சென்று சந்தித்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மருக்காலம்பட்டி நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போதுவன்முறை ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த ஊரில் வசித்த தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தலித்மக்களுக்குச் சொந்தமான 60 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்கப்பட்ட தலித் மக்கள் மருக்காலம்பட்டியைவிட்டு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர்.
அங்கு அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து மனித உரிமைகள் கமிஷனுக்கும், தமிழக அரசுக்கும் புகார் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மனித உரிமைக் கமிஷன் நீதிமன்ற நீதிபதிகள் சாமிதுரை மற்றும் சம்பந்தம்தலைமையில் அதிகாரிகள் நேரில் மருக்காலம்பட்டி சென்றனர். அங்கு தாக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்துஅவர்களின் குறைகளைக் கேட்டதோடு, அவர்களை மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்று தங்குமாறுகேட்டுக் கொண்டனர்.
மருக்காலம்பட்டியில் 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து தற்போது அந்தப் பொதுமக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பப ஆரம்பித்துள்ளனர்.
திமுக, அதிமுக இரண்டும் வேஸ்ட்: திருமாவளவன் பேச்சு
இதற்கிடையில் இந்த ஊரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் சந்தித்தார். மேலும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராகச் செயல்படுவதில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வித்தியாசம் இல்லை.இரண்டும் தலித் மக்களுக்கு விரோதமாகத் தான் செயல்பட்டு வருகின்றன.
மருக்கலம்பட்டியில் நடைபெற்றது போன்று தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள் வேறெங்கும்நடைபெறாமல் தடுக்க போலீசார் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் நியாயமாகச் செயல்பட்டால் தான் இதுபோன்றவன்முறைகளைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications