பொழுதுபோக்கு மையங்களுக்கு கூடுதல் வரி
சென்னை:
ஸ்நோ பவ்லிங், ஸ்நூக்கர் போன்ற நவீன பொழுதுபோக்கு மையங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் தமிழ்நாடுகேளிக்கை வரிவிதிப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2001-2002ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், வசதிபடைத்தவர்கள் பயன்பெறும் வகையில், ஸ்நோ பவ்லிங்,ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு மையங்களுக்கு 20 சதவீதகேளிக்கை வரிவிதிக்கப்பட்டது.
இதன்படி நவம்பர் முதல்தேதியிலிருந்து, இந்த வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
எனவே ஏற்கனவே இதுபோன்ற மனமகிழ்மன்றங்களை நடத்திவருபவர்கள் வரும் 15ம் தேதிக்குள்ளாகவும்,புதிதாக மன்றங்கள் தொடங்க விரும்புவோர், தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்னரும், படிவம் 1 பி மூலம்சம்பந்தப்பட்ட வணிகவரிகள் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications