"டெய்ஸி கட்டர் குண்டுகள்" மூலம் தாக்குதல் ஆரம்பம்
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க விமானங்கள் இன்று (புதன்கிழமை) 31வது நாளாக குண்டு வீச்சு தாக்குதலைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. "டெய்ஸி கட்டர் குண்டுகள்" மூலம் பயங்கரமான தாக்குதலை அமெரிக்கவிமானங்கள் ஆரம்பித்துள்ளன.
"டெய்ஸி கட்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 6,800 கிலோ எடைகொண்டவை. பாராசூட்டுகள் மூலம் அமெரிக்கவின் சி-130 ரக விமானங்கள் இந்தக் குண்டுகளை வீசின.
550 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளைக் கடுமையாகச் சிதைக்க வல்லவை இந்த "டெய்ஸி கட்டர்குண்டுகள்". தலிபான்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகளையும் குகைகளையும்அழிப்பதற்காகவே இந்தக் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இன்று அதிகாலை காபூல் நகரின் வடக்குப் பகுதியில் தலிபான் நிலைகளின் மீது அமெரிக்க விமானங்கள்குண்டுகளை வீசின. பக்ராம் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டே அமெரிக்க விமானங்கள் இன்றைதாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நார்த்தர்ன் அலையன்ஸ்ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்-ஏ-ஷெரீப்பைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களைக்கைப்பற்றியுள்ளதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் அமெரிக்க விமானங்கள் இன்னும் குண்டு வீச்சைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குண்டு வீச்சை அமெரிக்கா தீவிரப்படுத்தினால்தான் தலிபான்களை எளிதாக வெற்றி கொள்ள முடியும் என்றுநார்த்தர்ன் அலையன்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications