திமுக பேரணி வன்முறை - சிபிஐ விசாரணை கோரும் நிருபர்கள்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியின்போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளசுரேஷ் குமார் உள்ளிட்ட 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,திமுக பேரணியின்போது திடீரென ஏற்பட்ட வன்றையை செய்தியாகவும், புகைப்படங்களாகவும்பத்திரிக்கையாளர்கள் சேகரித்துக் கொண்டிருந்தபோது, டி.ஜிபி அலுவலகம் அருகேயும், உள்ளேயும்பத்திரிக்கையாளர்களை சூழ்ந்து கொண்டு போலீஸார் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸாரை அணுகினால் விசாரணை நியாயமாக இருக்காது என்பதால்போலீஸாரை பத்திரிக்கையாளர்கள் அணுகவில்லை. எனவே இந்த சம்பவம் குறித்துசி.பி.ஐ.விசாரணைக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றுகூறியிருந்தனர்.
பத்திரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனுவை வழக்கறிஞர் நளினி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மனைவி) தாக்கல்செய்தார். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சந்திரன் ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதி சண்முகம்,இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications