ஜெ. மீதான வழக்குகளை வாபஸ் பெற ரகசிய திட்டம்?
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, கண்ணப்பன் உள்ளிட்ட பலர் மீதுபதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தரகசியக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் புரிந்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும்முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 46 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.மற்றும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக தனியாக 3 நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஜெயலலிதா மீதுமட்டும் 5 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றில் தீர்ப்பளிக்கப்பட்ட 4 வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டும்ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரானைட் ஊழல் வழக்கும், மீனா அட்வர்டைசிங் வழக்கும்எப்.ஐ.ஆர். நிலையில் உள்ளன.
இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், ரகசியக்கூட்டம் ஒன்றும் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், உளவுத்துறை ஐ.ஜி. வெங்கடகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் சங்கர், பொதுத்துறைச் செயலாளர் பிச்சாண்டி மற்றும் தமிழக சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சர்பொன்னையன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைவாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என்பதால், எப்.ஐ.ஆர்.நிலையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications