4 முறை தப்பிய கைதி தஞ்சையில் சுட்டுக் கொலை
தஞ்சாவூர்:
கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, 3 முறை போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கைதிநான்காவது முறை தப்பியோடிய போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பிடாரி கோவில் சேர்ந்த அப்துல் கரீம் என்பவரது மகன் முகம்மது ரபீக். இவர் கும்பகோணம்பகுதியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு மற்றும் பல வழிப்பறிக் கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுசிறையில் திருச்சி அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக திருச்சியிலிருந்து, கும்பகோணத்திற்கு விசாரணைக்காக ரபீக்கைபோலீசார் அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சிக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போது, தஞ்சாவூர் அருகேஉள்ள கொடி மரத்து மூலை என்ற இடத்தில்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரபீக்,போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து விட்டார். இதையடுத்து ரபீக்கை பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) ரபீக்கை போலீசார், கும்பகோணம் மகாமகக் குளத்துக்கருகில்கைது செய்தனர். பிறகு ரபீக்கை ஒரு ஜீப்பில் ஏற்றி தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். தஞ்சை பழையஅக்ரஹாரம் பைபாஸ் ரோடு அருகே ஜீப் சென்றபோது, எதிரே வந்த லாரிக்காக ஜீப் மெதுவாகச் சென்றது.
அப்போது கையில் இணைக்கப்பட்டிருந்த விலங்கை கழற்றிவிட்டு, ஜீப்பிலிருந்து இறங்கி ரபீக் தப்பி ஓடினார்.
இதையறித் போலீசார் விரட்டிச் சென்றும், அவர்களால் பிடிக்க முடியவில்லை. எனவே, போலீஸ் ஏட்டு காட்டுராஜாதன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரபீக்கை நோக்கிச் சுட்டார். இதில் ரபீக்கின் மார்பில் குண்டு பாய்ந்து, அதேஇடத்தில் இறந்தார்.
இச்சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கி சூடு குறித்து ஆர்.டி.ஓ.கனகராஜன் விசாரணை செய்துவருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications