சிவகாசியில் தொடர்கிறது சிறார் தொழிலாளர் கொடுமை
சென்னை:
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 4 வயது சிறுவர்கள் கூட வேலை வாங்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழிலாளர்பாதுகாப்புக் குழு தலைவர் தாமஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் தாமஸ் ஜெயராஜ் சிறார் தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறார்தொழிலாளர்களை நிறுத்தி விட்டதாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள்கூறி விட்டாலும் கூட அது நடைமுறையில் பொய்யான தகவலாகும்.
சிவகாசி அருகே திருத்தங்கல் என்ற இடத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததை எங்கள்குழுவினர் நேரடியாகப் பார்த்துள்ளனர். இதுபோன்ற நிலைதான் சிவகாசி முழுவதும் நீடித்தது வருகிறது
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்கள் தப்பி விடுகின்றனர்.
நகர்ப்புறங்களில் பட்டாசுத் தயாரிப்பதில் சிறார் தொழிலாளர்களைத் தடை விதித்துள்ளது போல கிராமப்புறங்களிலும் தடைவிதிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications