புஷ் கூறுவது பொய் என்கிறார் தலிபான் தளபதி
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் ராணுவத்தையும் பின்லேடன் தலைமையிலான அல்-காய்தா இயக்கத்தையும் நிலைகுலையச் செய்துவிட்டதாக அமெரிக்கா கூறுவது சுத்தப்பொய் என்று தலிபான் ராணுவத் தளபதியும் லேடனின்நெருங்கிய நண்பருமான அய்மான் அல் ஜவாஹிரி கூறினார்.
கத்தாரிலிருந்து ஒளிபரப்பப்படும் அல்-ஜஸீரா டிவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை)அவர் அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது,
எங்கள் ராணுவத்தை அடக்கிவிட்டு அல்-காய்தா இயக்கத்தை முற்றிலும் அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர்புஷ் அந்நாட்டு மக்களிடம் கூறியிருக்கிறார். இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இந்தச் செய்தியைக் கேட்டுஉலகமே சிரிக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா ஆப்கான் மீது நடத்திய தாக்குதலில் 1,600 அப்பாவிப் பொதுமக்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
அமெரிக்கா எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லித் தான் இதுபோன்ற தாக்குதலை நடத்துகிறது. அப்படிசொல்லிவிட்டுப் போகட்டும். கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார். அமெரிக்காவின் எண்ணம் பலிக்காது. போரில்அமெரிக்கா தோற்கடிக்கப்படும்.
அந்நாடு எவ்வளவு படைகளை வேண்டுமானாலும் இங்கு கொண்டுவரட்டும். எங்களை வென்றுவிட்டோம் என்றுஎவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் சொல்லட்டும். இனி நாங்கள் நடத்தவிருக்கும் தாக்குதலில் யார்சொல்வது பொய், யார் சொல்வது உண்மை என்பது உலகுக்குத் தெரியவரும்.
இந்தப் புனிதப் போரில் இருந்து ஒருபோதும் நாங்கள் பின்வாங்கமாட்டோம். கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார்.நாங்கள் வெல்வோம்.
பாலஸ்தீனத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் யூதர்களையும், அமெரிக்கர்களையும் விரட்டும் வரை நாங்கள்ஓயமாட்டோம்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் அல் ஜவாஹிரி கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications