கைதான கண்டக்டர் சிறையில் சாவு
சென்னை:
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு கைதான அரசு பஸ் கண்டக்டர் எஸ். ஹரிபாபு (30) நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை மர்மமான முறையில் மரணமடைந்தார்.
12 ஜி பஸ்சில் கண்டக்டராக இருந்து வந்த ஹரிபாபு, கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார்.இன்னும் அவருடைய வேலை நிரந்தரமாகவில்லை.
ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் வி. சங்கரி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
சென்னை-கே.கே. நகர் அரசு பஸ் டிப்போ முன்பாக சனிக்கிழமை நடந்த மறியல் போராட்டத்தின்போது அவர்கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் பல பஸ் ஊழியர்களும் கைதானார்கள்.
தான் ஒரு சத்திரத்தில் அடைக்கப்பட்டிருப்பதாக வீட்டுக்குப் போன் மூலம் ஹரிபாபு தெரிவித்திருந்தார். ஆனால்பின்னர் அவர் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், சனிக்கிழமை இரவு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று வீட்டுக்குத் தகவல் வந்ததாம். தொடர்ந்து,அவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மறுநாள் காலைபோலீசார் தெரிவித்தனர்.
பிறகு நேற்று மாலை 6.30 மணிக்கு ஹரிபாபுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவர் இறந்து விட்டதாகக் கூறி,பரிசோதனைக்காக அவருடைய உடல் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருடைய உறவினர்களும் நண்பர்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குஹரிபாபுவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்குத் தயாராக இருந்தது.
உடல்நலக் குறைவால் அவர் இறந்து விட்டார் என்றும், ஆர்.டி.ஓ. முன்னிலையில் வீடியோ பதிவு எடுத்துஅவருடைய உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ஹரிபாபுவின் உறவினர்கள், மருத்துவமனையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடமுயன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அங்குகுவிக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications