பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: மத்திய அமைச்சர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

மத்திய அமைச்சர் ராஜா சென்ற காரின் மீது லாரி மோதியதில் அவரும், காரின் டிரைவர் மற்றும் காரில் பயணம்செய்த 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் எச்.ராஜா. பெரம்பலூரில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை டெல்லியிலிருந்து பெரம்பலூர் வந்தார்ராஜா.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் உடல் நிலைசரியில்லாமல் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் துறையூர் ராசி குணசீலனை நலம் விசாரிப்பதற்காகஅவரது வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

காரை அவரது டிரைவர் அசோக் ஓட்டினார்.மாலை 6.15 மணியளவில் கார் அம்மாபாளையம்-கலரப்பட்டிஇடையே சென்று கொண்டிருந்த போது துறையூரிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த லாரி மத்தியஅமைச்சர் பயணம் செய்து கொண்டிருந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த மத்திய அமைச்சர் ராஜாவும், காரின்டிரைவரும் படுகாயமடைந்தனர். அந்த காரிலிருந்த மற்ற 3 பேரும் காயமடைந்தனர்.

அமைச்சரின் காருக்கு பாதுகாப்பாக காருக்கு பின்னால் ஜீப்பில் வந்துகொண்டிருந்த போலீசார், விபத்து நடந்ததைபார்த்து உடனே காருக்குள் தாடையில் அடிபட்டு ரத்தகாயம் அடைந்திருந்த அமைச்சரை போலீஸ் ஜீப்பில்ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கார் டிரைவரும் மற்றவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சரின் காயத்திற்கு தையல் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின் அமைச்சரும் மற்றவர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள சீ ஹார்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+