தலைநகர் காபூலை பிடித்தது நார்த்தர்ன் அலையன்ஸ்
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலைகைப்பற்றினர். இதையடுத்து தலிபான் படையினர் காபூலைக் காலி செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
கடந்த இரு நாட்களாக தலிபான்களின் முக்கிய நகர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் பிடித்து வருகிறது.
இன்று அதிகாலை ஆப்கான் தலைநகர் காபூலுக்குள் அலையன்ஸ் படையின் போலீஸ் குழுவினர் முதலில் ஜீப்களில்நுழைந்தனர். இவர்களைப் பார்த்த உடனேயே தலிபான்கள் ஓட ஆரம்பித்துவிட்டனர்.
தங்களது ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு வாகனங்களில் தலிபான் வீரர்கள் தப்பியோடினர்.
போலீஸ் படையைத் தொடர்ந்து ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்ச்சர்களுடன் ஏராளமான நார்த்தன்அலையன்ஸ் படையினர் காபூலுக்குள் நுழைந்தனர்.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் மாட்டிக்கொண்ட 4 தலிபான் வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
காபூல் நகரின் தெருக்கள் முழுவதும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தான் காணப்படுகின்றனர். மேலும் காபூல்பொதுமக்கள் தெருக்களில் கூடி, நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை வரவேற்றதுடன், "அல்லாஹூ அக்பர்"என்று கோஷம் எழுப்பியவண்ணம் உள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து படை வீரர்களும் மகிழ்ச்சியில் கோஷம் எழுப்பி வருகின்றனர்,
கடந்த சில நாட்களில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர், தலிபான்கள் வசமிருந்த மஷார்-ஏ.ஷெரீப், குண்டூஸ்மற்றும் ஹெராத் ஆகிய முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில் காபூலையும் அவர்கள் கைப்பற்றும்நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications