தீவிரவாதம் இருக்கும் இடம் எல்லாம் போர் தொடுக்க வேண்டும்: வாஜ்பாய்
லண்டன்:
தீவிரவாதத்திற்கு எதிரான போர் பின்லேடனை ஒழிப்பதுடன் நின்றுவிடக் கூடாது என்றும் அதையும் தாண்டி மற்றநாடுகளில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை நீடிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர்வாஜ்பாய் அந்நாட்டுப் பிரதமர் டோனி பிளேரிடம் தெரிவித்தார்.
அப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போருக்கு இந்தியா தரும் ஆதரவுக்கு பிளேர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் காஷ்மீரில் தீவிரவாதிகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்.இதற்கு தீவிரவாதிகள் தரப்பில் என்ன காரணங்கள் சொன்னாலும் அவற்றை ஏற்கமுடியாது என்றும் அவர் கூறினார்.
அப்போது வாஜ்பாய் கூறுகையில், தீவிவாதத்திற்கு எதிரான போர் பின்லேடனை ஒழிப்பதிலும், அவரதுதலைமையிலான அல்-காய்தா இயக்கத்தை அழிப்பதுடனும் முடிந்து விடக்கூடாது.
மேலும் அந்தப் போர் ஆப்கானிஸ்தானுடன் முடிந்துவிடாமல், உலகத்தில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் அனைத்துநாடுகள் மீதும் நடக்க வேண்டும்.
மேலும் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசு, தீவிரவாதத்தை முற்றிலும் எதிர்க்கும் நோக்கம்கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்றார்.
ஆப்கானிஸ் மிதவாத தலிபான்கள் பிரிவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தீவிரவாதத்துக்கு எதிரானபோரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் கூறிவருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
ஜெட் டிரெய்னர் விமானம்(ஏ.ஜெ.டி)
இந்திய விமானப் படைக்கு போர் பயிற்சி விமானங்களை (அட்வான்ஸ் ஜெட் டிரைனர்) வழங்கத் தயாராகஇருப்பதாக டோனி பிளேர் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா கூறியதாவது, வாஜ்பாயின் இங்கிலாந்து வருகை,ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவதற்காக அல்ல. இருப்பினும் பேச்சுவார்த்தையின் இடையில்இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கு ஏ.ஜெ.டி. ரக விமானங்களை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதுகுறித்த முழுமையான பேச்சவார்த்தை பிரிட்டிஷ் ராணுவ அமைச்சர் ஜெப் ஹூன் டெல்லிக்கு வரும் போதுதொடங்கப்படும். அவர் நாளை டெல்லிக்கு வர இருக்கிறார் என்றார்.
விரைவில் மீண்டும் இந்தியா வரவும் பிளேர் ஒப்புக் கொண்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications