27 பேர் சாவு .. அரசு மீது கருணாநிதி புகார்
சென்னை:
அரசின் வீண் பிடிவாதப் போக்கினால் 27 விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கோவில்பட்டி சாலை விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கைஉடைக்க வேண்டும் என்ற பிடிவாதப் போக்கினால் பயிற்சி பெறாத டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் தேவை என்ற கோரிக்கையுடன் பலமுறை அரசுடன் பேசியும் தீர்வுஏற்படாத காரணத்தால்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால் அதை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயிற்சி பெறாத டிரைவர்களை பணியில் அமர்த்திய காரணத்தால்தான் கோவில்பட்டிவிபத்தில் 27 பேர் இறந்துள்ளனர்.
இனியும் அரசு பிடிவாதம் பிடிக்காமல், வீணான வாதங்களைப் புரியாமல் உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன்பேச்சு நடத்த முன்வர வேண்டும்.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி கைதாகியுள்ள ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையான சுமூக நிலையை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications