ஈரோடு: பெற்றவுடன் மருத்துமனையிலேயே பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த ஒரு பெண் தனக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் அதைஅங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லதா. லதாவுக்கு கடந்த 12ம் தேதிஈரோடு அரசு மருத்துவமனையில் மாலை 6.00 மணிக்கு ஒரு அழகிய பெண்குழந்தை பிறந்தது.
மறுநாள் அதிகாலை அந்தக் குழந்தை நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தது. இதனால் பக்கத்து வார்டில்இருந்தவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அக்குழந்தையின் அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்குகுழந்தை மட்டும் தனியாகப் படுத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் அந்தக் குழந்தையின்தாயைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்தக் குழந்தையின் தாய் கொடுத்த விலாசத்தை வைத்துஅந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடி வருகிறார்கள். ஆனால் அவள் கொடுத்தது உண்மையானவிலாசம்தானா அல்லது போலியான விலாசமா என்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.
தற்போதைய தமிழக அரசு முன்பு கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு மீண்டும் புத்துணர்வுகொடுத்துள்ளது. இருப்பினும் அதையெல்லாம் நாடாமல் இப்படி பெற்றெடுத்தவுடன் குழந்தையைஅனாதையாக்கிவிட்டுச் செல்லும் கொடுமை இன்னும் தொடர்கிறது.
தேனி, உசிலம்பட்டி, சேலம் போன்ற பகுதிகளில்தான் இதுபோன்ற கொடுமைகள் அதிகமாக இருந்தது. தற்போதுஈரோடு பகுதிகளிலும் இந்தக்கொடுமைகள் ஆரம்பித்துள்ளன என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications