புதுவை: 21ம் தேதி பெரும்பான்மையை நிருபிக்கிறார் ரங்கசாமி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை வரும் 21ம் தேதி பெரும்பான்மையைநிரூபிக்க உள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் சிவப்பிரகாசம் கூறினார்.
பாண்டிச்சேரியில் முதல்வராக இருந்த சண்முகம் குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாக முடியாமல்போனதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான ரங்கசாமி கடந்த அக்டோபர் 27ம் தேதி புதிய முதல்வராகப் பதவியேற்றார். மேலும் கடந்த 11ம் தேதிமூன்று அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ரங்கசாமி பதவியேற்றுக் கொண்ட ஒரு மாத காலத்திற்குள் சட்டசபையில் தனது கட்சிக்குள்ள பெரும்பான்மையைநிருபிக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.
30 பேர் கொண்ட பாண்டிச்சேரி சட்டசபையில் தற்போது காங்கிரசுக்கு 15 எம்.எல்ஏக்கள் உள்ளனர். மேலும்இரண்டு சுயேச்சைகளும், த.மா.காவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் ரங்கசாமியின் அமைச்சரவைக்குஆதரவளித்துள்ளனர்.
இந்நிலையில் ரங்கசாமி சட்டசபையில் தனது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று வரும் 21ம்தேதி நிருபிக்க இருக்கிறார் என்று பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர் சிவப்பிரகாசம் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக வாபஸ்பெற்றுக்கொண்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications