குண்டூஸ் நகரில் சரணடைய தலிபான்கள் தயார்
குண்டூஸ்:
வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரின் பல பகுதிகளை இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் படைகள் மீது அமெரிக்க விமானங்கள்குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்தத் தாக்குதல்களில் 1,000 பொது மக்கள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நகரில் செசன்யா, அரேபிய நாடுகள், பாகிஸ்தானைச் சேர்ந்ததீவிரவாதிகள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையை எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த நகரம் தவிர மற்ற எல்லா வட பகுதிகளையும் நார்த்தர்ன் அலையன்ஸ் பிடித்துவிட்டதால் தலிபான்கள் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுவருகின்றனர். நகரைச் சுற்றிலும் நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் நிற்கின்றன.
இதையடுத்து தலிபான்கள் சரணடைந்துவிட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நகரின் தலிபான கமாண்டரான முல்லா பாசில் தனது வீரர்களுடன்சரணடையத் தயார் என்று அறிவித்துள்ளார். ஆனால், நார்த்தர்ன் அலையன்சிடம் சிக்கினால் உயிர் இழப்பது நிச்சயம் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையிடம்சரணடையத் தயார் என்று கூறியுள்ளார்.
இதை ஐ.நா. ஏற்குமா என்பது சந்தேகம் தான்.
இதற்கிடையே ஜலாலாபாத் அருகே இருந்த அல்-காய்தா தீவிரவாத முகாம் குண்டு வீச்சால் முழுமையாக சேதமைடந்தது. அங்கிருந்த டாங்கிகள், கவசவாகனங்கள் குண்டு வீச்சில் தகர்க்கப்பட்டன.
பிணக் குவியல்:
மேற்கு ஆப்கானிஸ்தானில் பெரிய சவக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நார்த்தர்ன் அலையன்ஸ்படையைச் சேர்ந்த 27 வீரர்களின் கொலை செய்யப்பட்ட உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில்புதைக்கப்பட்டுள்ளன.
மூன்று வாரங்களுக்கு முன் மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வெளியேறும் முன் தங்களிடம் பிணயக்கைதிகளாக இருந்த இந்த வீரர்களை தலிபான்கள் கொலை செய்து இவ்வாறு புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
ஹெராட் நகர் அருகே ஷிந்தான்த் நகர விமானத் தளத்தின் அருகே இந்த உடல்கள் ஒன்றன் மீது ஒன்றாககுவிக்கப்பட்டு அரைகுறையாக மண்ணால் மூடப்பட்டிருந்தன.
தூதரகத்தைத் திறக்கும் ஈரான்:
அதே போல ஹெராட் நகரில் இயங்கி வந்த தனது தூதரகத்தை மீண்டும் திறக்க ஈரான் முயன்று வருகிறது.
ஈரானில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த நகரை நார்த்தர்ன் அலையன்ஸைச் சேர்ந்த அப்துல் ரஷீத்தோஸம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார். தலிபான்களை எதிர்க்க இவருக்கு ஈரான் உதவி வந்தது.
இப்போது இந்த நகரில் தனது நாட்டுத் தூதரகத்தைத் திறக்க ஈரான் ஆட்களை அனுப்பி வைத்துள்ளது.தலிபான்களால் இந்த தூதரகம் எரிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார் ஒசாமா:
ஆப்கானிஸ்தானில் இருந்து ஒசாமா தப்பிவிட்டதாக வரும் செய்திகளை அமெரிக்க நிராகரித்துவிட்டது.காண்டஹார் நகரைச் சுற்றியுள்ள மலைகளில் தான் அவர் பதுங்கியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைஅமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தலிபான்களின் கட்டமைப்பு முழுமையாகக் குலைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியில் பெண்களுக்கு பங்கு:
ஆப்கானிஸ்தானில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் பெண்களுக்கும் இடம் தர வேண்டும் என அமெரிக்காகூறியுள்ளது.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகரான காண்டலீலா ரைஸ் கூறுகையில், தலிபான்களை ஆட்சியில் சேர்க்கவிட மாட்டோம். ஆட்சியில் அனைத்து இனத்தினருக்கும் இடம் இருக்க வேண்டும்.
இப்போது நாட்டின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்அதிகாரத்தை பிறருக்கும் பகிர்ந்து தர தயாராக உள்ளனர். இந்தப் படையினர் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications