குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் பஸ் ஊழியர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் மேலும் இரு தினங்களுக்குத் தொடரும் எனவும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 11 தினங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், வேன்களைக் கொண்டு அரசுசமாளித்து வருகிறது.
ஆனால், இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் ஆட்டோக்காரர்கள் மொத்தசம்பளத்தையுமே கட்டணமாகக் கேட்பதாலும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அரசு பஸ் டிரைவர்கள் பாதி நேரம் எதிலாவது மோதிக்கொண்டுள்ளனர்.இதனால் இதில் ஏறவே மக்கள் அஞ்சுகின்றனர்.
இந் நிலைலயில் இன்று சென்னை தாம்பரத்தில் 800க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் மனைவி,குழந்தைகள், பெற்றோருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அதே போல திருச்சியில் 200 போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் மத்தியில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி உள்பட பலர் பேசினர்.
இதே போல சேலம், மதுரை உள்பட அனைத்து இடங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications