கலப்பு மணத் திட்டத்துக்கு கருணாநிதியின் தாயார் பெயர்: நீக்கியது அதிமுக அரசு
சென்னை:
தமிழக அரசின் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்துக்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் தாயார் பெயர்நீக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்துக்கு அன்னை அஞ்சுகம் அம்மையார் திட்டம் என்றுபெயரிடப்பட்டிருந்தது. ஆனால், இதை நீக்கிவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின் கீழ் இரு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் அரசு நிதியுதவி வழங்கிவருகிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் பிற ஜாதியினரும் கலப்புத் திருமணம் செய்தால் ரூ. 20,000மும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, மற்றும் உயர் ஜாதியினர் கலப்புத் திருமணம் செய்தால் ரூ. 10,000மும் உதவித் தொகைவழங்கப்படுகிறது.
திட்டம் நல்ல திட்டம் தான் என்றாலும் அதற்கு திமுக தலைவர் தனது தாயாரின் பெயரை வைத்தார். இது திமுகஆட்சியில் மட்டுமல்ல எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் இது போல நடந்ததுண்டு.
ஜெயலலிதா தான் எல்லோருக்கும் ஒருபடி மேலே சென்று தனது பெயரையே எல்லாவற்றுக்கும் வைத்தார்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பெயரில் இருந்த அனைத்துத் திட்டங்களையும் பெயர் மாற்றினார்.ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்தின் பெயரும் மாற்றப்பட்டது.
இப்போது மீண்டும் ஆட்சி அதிமுகவிடம். இதையடுத்து கருணாநிதியின் தாயார் பெயரில் இருக்கும் அரசின்திட்டம் உடனடியாக மாற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் இனிமேல் தமிழக அரசு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்று தான் அழைக்கப்படும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications