அமைச்சர் வளர்மதியிடமிருந்து அதிமுக மகளிர் அணித் தலைவி பதவி பறிப்பு
சென்னை:
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் வகித்து வந்த அதிமுக மகளிர் அணித்தலைவி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளர்மதிக்கு பதிலாக அந்தப் பதவியில் ராஜ்யசபா எம்.பியான கோகுலம் இந்திரா நியமிக்கப்பட்டுள்ளார் என்றுஅறிவித்துள்ளார்.
வளர்மதி ஜெபராஜ் தொடர்ந்து விவகாரமான செய்திகளில் அடிபட்டு வருபவர். முன்பு மூத்த அதிகாரியொருவரைசெருப்பு வாங்கி வரச் சொன்னதாக புகார் எழுந்தது.
பின்னர் அவரது தம்பி அடாவடியாக பலரிடம் பண வசூலில் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது.
இதற்கெல்லாம் உச்சமாக கடந்த வாரம் அமைச்சரின் உதவியாளர் சண்முகசுந்தரம் என்பவர் மீது அமைச்சரின்தம்பியே கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மதுரையில் நக்கீரன் பத்திரிக்கையில் நிருபராக இருந்த சண்முகசுந்தரம் வளர்மதி அமைச்சரான பின்னர் வருக்குஉதவியாளரானார். ஆனால், இவருக்கும் வளர்மதியின் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
தனது அக்காள் வளர்மதியை சண்முகசுந்தரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புகார் கூறிய அவரது தம்பி,இரு வாரங்களுக்கு முன் ரெளடிகளுடன் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினார். இதில் சண்முகசுந்தரம்பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
இதையடுத்து தனது தம்பியையே கைது செய்யச் சொன்னார் வளர்மதி.
இப்படி தொடர்ந்து பத்திரிக்கை செய்திகளில் அடிபட்டு வரும் வளர்மதி மீது இப்போது ஜெயலலிதா நடவடிக்கைஎடுத்துள்ளார்.
இவர் கடந்த தேர்தலில் மதுரையில் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனை வென்று எம்.எல்.ஏ. ஆனவர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications