ஜீவஜோதியின் புதுக் கடிதம் .. நீதிபதி சந்தேகம்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக கொடுத்த புகாரை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக ஜீவஜோதிகொடுத்ததாகக் கூறி ராஜகோபால் தரப்பினர் ஒரு கடிதம் கொடுத்தனர். ஆனால், இந்தக் கடிதத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதிதெரிவித்துவிட்டார்.
ராஜகோபாலிடம் தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறுராஜகோபால் கட்டாயப்டுத்துவதாகவும், தனது கணவரை கொல்ல முயலுவதாகவும் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதிஎன்ற பெண் மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் புகார் கொடுத்திருந்தார்.
தமிழகத்தையே மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கிய இந்த புகாரையடுத்து ராஜகோபால் தலைமறைவாகி விட்டார். அவரது கூட்டாளிகள் 18 பேர்கைது செய்யப்பட்டனர். புகாரைத் தொடர்ந்து ஜீவஜோதி அவரது சொந்த ஊரான வேதாரண்யத்துக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி ராஜகோபால் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அசோக் குமார் முன்பு மனுத் தாக்கல் செய்தார். அவரதுசார்பில் பிரபல வக்கீல் வானமாமலை மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்தது. விசாரணை தொடங்கும் முன்புஜீவஜோதி எழுதியதாக ஒரு கடிதத்தை நீதிபதி அசோக்குமாரிடம் வக்கீல் வானமாமலை கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ராஜகோபாலிடம் தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் தப்பிக்க வேண்டுமானால் போலீஸில் புகார் செய்யவேண்டும். அப்போதுதான் ராஜகோபால் கடனை நேரடியாக கேட்க முடியாது, கோர்ட் மூலமாகவே கேட்க முடியும் என்று சிலர் கூறியதால்தவறுதலான புகாரைத் தெரிவித்து விட்டேன். எனவே எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். இந்த புகார் மீது மேற்கொண்டு எந்தநடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார்ஆகியோரது பெயர்களில் கையெழுத்து இடப்பட்டிருந்தது.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட நீதிபதி அசோக் குமார், வானமாமலையைப் பார்த்து இந்தக் கடிதம் மிரட்டிப்பெறப்பட்டதா அல்லது அந்தப்பெண்ணே எழுதியதா என்று கேட்டார். பின்னர் தொடர்ந்து, தனது பெற்றோர் மீதே அந்தப் பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தநிலையில் இப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதியிருப்பார் என்பதை நம்புவதற்கில்லை. எனவே இதுகுறித்தம், ஜீவஜோதி கொடுத்துள்ளபுகாரில் உள்ளவை குறித்து போலீஸார் நியாயமான வகையில் விசாரணை நடத்த வேண்டும்.
வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அன்று, இந்தக் கடிதத்தை எழுதிய ஜீவஜோதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும். அதுவரை ராஜகோபாலை போலீஸார் கைது செய்யக் கூடாது என்று நான் உத்தரவிட மாட்டேன் என்று கூறினார் நீதிபதி அசோக்குமார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது அரசு வக்கீலுக்கும், வானமாமலைக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications