3 அமைச்சர்களின் கட்சிப் பதவி பறிப்பு: ஜெ. மீண்டும் அதிரடி
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேலும் 3 அமைச்சர்களின் கட்சிப் பதவிகளை அதிரடியாகப்பறித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் வளர்மதிஜெபராஜை நீக்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகவேலு மற்றும் சண்முகநாதன்ஆகியோர்களையும் கட்சிப் பதவியிலிருந்து ஜெயலலிதா தூக்கி எறிந்துள்ளார்.
மொத்தம் 14 மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
அதிமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார் மின்துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போதுஅவரிடமிருந்து அப்பதவியைப் பறித்துள்ள ஜெயலலிதா, மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளரானபி.கே. சேகர்பாபுவுக்குக் கொடுத்துள்ளார்.
கடந்த மாநகராட்சித் தேர்தலில் சென்னையில் பெரும்பாலான கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க சேகர் பாபுபெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த பால்வளத்துறை அமைச்சர் சண்முகவேலுவும்அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச் செயலாளரான கே. சுகுமாருக்குதற்போது இப்பதவியைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
மேலும் கைத்தறித் துறை அமைச்சரான எஸ்.பி. சண்முகநாதன் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர்பதவியையும் ஜெயலலிதா பறித்துள்ளார். இப்பதவி தற்போது திருச்செந்தூர் எம்.எல்.ஏவான அனிதா ரத்னத்துக்குச்சென்றுள்ளது.
தனக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு தேனிமாவட்ட செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
இன்னும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள் என்று அதிமுகவட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications