பஸ் ஊழியர்கள் பந்த் வாபசாகுமா?
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தால், நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கவுள்ள பந்த் வாபஸ் பெறப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கும் சங்கங்களுக்கும் இடையே நேற்று இரவு முழுவதும் நீடித்து இன்று அதிகாலை வரை நடந்தபேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நாளை கட்டாயம் பொது வேலை நிறுத்தம் நடக்கும் என்றுசங்கங்கள் கூறியிருந்தன.
இதற்கிடையே, கடந்த 13 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பஸ்களுக்குச் சேதம் விளைவித்தபோக்குவரத்துக் கழக ஊழியர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் எச்சரிக்கைநோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை அரசுக்கும், பஸ் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே மீண்டும்பேச்சுவார்த்தை துவங்கியது.
காலையில் நடந்த பேச்சுவார்த்தையின் படி, அரசு கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. பணிக்கு வராமல்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பஸ் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகப் பணி நீக்க உத்தரவை வாபஸ்பெற்றுக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த 13 நாட்களையும் விடுமுறை நாட்களாக எடுத்துக் கொள்ளவும் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும் என்றுஎதிர்பார்ப்பதாக பஸ் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால், நாளை நடக்கவுள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ்பெற்றுக் கொள்ளப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போனஸை தவணை முறையில் வங்கிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து ஊழயர் சங்கங்கள்ஏற்கனவே அறிவித்துள்ளன.
இதையடுத்து, இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில்தான் நாளை பந்த் நடக்குமா நடக்காதா என்பது பற்றித்தெரிய வரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications