தனியார் பஸ்களுக்கு அதிக ரூட்களை ஒதுக்க அரசு முடிவு
சென்னை:
தமிழகத்தில் இதுவரை தனியார் பஸ்கள் இல்லாத இடங்களில் பஸ் போக்குவரத்தை தனியாரிடம் ஒப்படைக்கதமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பஸ் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள ஸ்டிரைக்கால் பொதுமக்கள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2 கொடுத்து ஒரு இடத்திற்கு போக வேண்டிய அவர்கள் இப்போது ரூ.5 மற்றும் ரூ.10கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு பஸ் தொழிலாளர்களின் இந்த ஸ்டிரைக்கால் பொதுமக்கள் மற்றும் அரசு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதைஉணர்ந்துள்ள தமிழக அரசு பஸ் போக்குவரத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் கூட பெரும்பாலான இடங்களில்தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னை மற்றும் மதுரை நீங்கலாக அனைத்து நகரங்களிலும் தனியார் சிட்டி பஸ்கள் இயங்கிவருகின்றன. சென்னை நீங்கலாக அனைத்து இடங்களிலும் மினி பஸ்கள் ஓடுகின்றன. தற்போது அரசு எடுக்கவுள்ளபுதிய முடிவின்படி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் தனியாருக்கு சில ரூட்களைக் கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தேவைப்பட்டால் சென்னை நகரில் மினி பஸ்களை அறிமுகப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மினி பஸ்களுக்கு சென்னையில் நல்ல வரவேற்பு உள்ளதே இதற்குக் காரணம்.
சென்னையைப் பொருத்தவரை நகருக்குள் தனியாரை அனுமதிக்காமல் முதல் கட்டமாக புறநகர்ப் பகுதிகளானதாம்பரம், பூந்தமல்லி, வண்டலூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிகொடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இதில் கிடைக்கும் வெற்றியைப் பொருத்து நகருக்குள்ளும் தனியார் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படும்என்று தெரிகிறது.
தனியாரிடம் பஸ் போக்குவரத்து ஒப்படைக்கப்பட்டால் அரசு பஸ்களுக்கு கடுமையான வீழ்ச்சி ஏற்படும்என்றாலும் கூட தனியார் பஸ்களுக்கு அதிக கட்டணத்தில் லைசன்ஸ் வழங்குவது, டிக்கெட் கட்டணத்தில் பங்குகேட்பது போன்றவற்றின் மூலம் அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
தனியாரிடம் பஸ் போக்குவரத்து ஒப்படைக்கப்படும் என்றசெய்தி அரசு பஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாகசென்னை ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications