மத்திய அரசுக்கு ஆதரவு தரத் தயார்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளில் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
முதலில் மத்திய அரசின் பொடோ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குபிரச்சனைகள் அடிப்படையிலான ஆதரவு தரப் போவதாக இன்று அறிவித்தார். மேலும் காங்கிரசுடனானஉறவையும் முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சூசகமாக அறிவித்தார்.
கருணாநிதி கைது விவகாரத்தில் பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக் கொண்டேசெல்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டங்கள் சிலவற்றை கருணாநிதி புறக்கணித்தார்.
பா.ஜ.க. தேசியத் தலைவரான ஜனா. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நடத்திய தனது மகனின் திருமணத்துக்குக் கூடகருணாநிதியை அழைக்கவில்லை. அந்தத் திருமணத்துக்கு வந்த பிரதமர் வாஜ்பாயை கருணாநிதி மரியாதைநிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
இந்த கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதமாக மாற்றும் முயற்சிகளில் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
பொடோ சட்டத்தை கருணாநிதி எதிர்த்து வரும் நிலையில் அந்தச் சட்டத்தை ஆதரிப்பதாக ஜெயலலிதாஅறிவித்தார்.
இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் பிரச்சனைகள் அடிப்படையில் தான் இனி எங்கள் ஆதரவு இருக்கும். அதிமுக ஒருசுயேச்சையான கட்சி (காங்கிரஸ் கூட்டணியில் இல்லை). நாங்கள் எங்கள் முடிவுகளை தனிப்பட்ட முறையில்எடுப்போம்.
திமுக-பா.ஜ.க. உறவில் விரிசல் ஏற்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவதாக பத்திரிக்கைகள் கூறுவது குறுத்துகருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை.
பாண்டிச்சேரியில் அதிமுகவை காங்கிரஸ் கேவலப்படுத்தி வருகிறது. எங்களை அக் கட்சி சரியாக நடத்தவில்லை.இதனால் தான் ஆதரவை வாபஸ் பெற்றோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications