புலிகளிடம் அரசா?: தடுப்பேன் என்கிறார் சந்திரிகா
கொழும்பு:
ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் இடைக்கால அரசு அமைக்க விடுதலைப் புலிகளுக்குஅனுமதியளிக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவேன் எனஅதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
டிசம்பர் 5ம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெறுவதையொட்டி சந்திரிகாவின் கட்சியும் யு.என்.பியின் ரணில்விக்கிரமசிங்கேயும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
யு.என்.பியின் தேர்தல் அறிக்கையில் தமிழர் பகுதிகளில் இடைக்கால அமைக்க தமிழர்களுக்கு அனுமதிஅளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புலிகளிடம் அந்தப் பகுதியை ஒப்படைப்பதைத் தான் இப்படிக் கூறுகிறதுயு.என்.பி. என சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார்.
அப்படி ஒரு திட்டத்தை யு.என்.பி. அமலாக்க முயன்றால் அதை நான் தடுத்து நிறுத்துவேன் என்றார். அனுராதபுராமற்றும் பொலன்னருவா மாவட்ட மக்களிடையே சாட்டிலைட் தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்றுஉரையாற்றுகையில் அவர் இதைத் தெரிவித்தார். புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தப்பகுதிக்கு நேரில் அவரால் பிரச்சாரத்துக்கு வர முடியவில்லை.
நாட்டின் வட-கிழக்குப் பகுதியை பிரபாகரனிடம் 5 ஆண்டுகளுக்குக் கொடுத்தால் போதும், அவர் அடுத்த இரண்டுஆண்டுகளில் இலங்கையையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிடுவார்.
ஆனால், அவருடன் யு.என்.பி. ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றார் சந்திரிகா.
அமெரிக்கா, இங்கிலாந்தின் உதவி கோரும் எதிர்க் கட்சிகள்:
இந் நிலையில் தேர்தலின்போது பெரும் அளவில் வன்முறையைத் தூண்ட அதிபர் சந்திரிகா குமாரதுங்காதிட்டமிட்டுள்ளதால், உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும் என அமெரிக்க, பிரிட்டன்,ஐரோப்பிய நாடுகளுக்கு எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து யு.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இந் நாட்டு அதிபர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்இலங்கையில் ஜனநாயகத்தைக் காக்க உதவ வேண்டும். எங்கள் கட்சித் தொண்டர்களை கொன்று குவிக்குமாறு ஒருபொதுக் கூட்டத்திலேயே அதிபர் பேசியுள்ளார்.
எனவே, நீங்கள் இதில் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications