மியான்மரில் 2 அணு விஞ்ஞானிகளை ஒழித்து வைத்துள்ள பாகிஸ்தான்
டெல்லி:
பின்லேடனுடன் தொடர்பு வைத்தள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு பாகிஸ்தானிய விஞ்ஞானிகள்மியான்மரில் ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச பயங்கரவாதி பின்லேடனுக்கு உதவியாதாக 2 பாகிஸ்தான் அணுவிஞ்ஞானிகளை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தான் அணுசக்திக் கமிஷன் முன்னாள் தலைவர் பஷீருதீன் முகம்மது மற்றும் அமெரிக்க தூதரகத்தில்பணியாற்றிய பொறியாளர் செளத்ரி அப்துல் மஜீத் ஆகியோரை அமெரிக்க உளவு நிறுவனங்கள் கைது செய்துவீட்டுக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றன.
ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்தது.
இந்நிலையில் மேலும் 2 விஞ்ஞானிகளை மியான்மார் நாட்டின் பாதுகாப்பில் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது என்றுகூறப்படுகிறது. இந்த 2 விஞ்ஞானிகளும் பின்லேடனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிப்பதாவது,
அணு விஞ்ஞானிகள் சுலைமான் ஆசாத், முகம்மது அலி முக்தார் ஆகியோர் சர்வதேச பயங்கரவாதி பின்லேடனுக்குஉதவியதாக அமெரிக்க உளவுப்பிரிவு சந்தேகிக்கிறது. ஆசாத்தும், முக்தாரும் பாகிஸ்தான் நாட்டில் அணுஆயுதஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்கள் பின்லேடனுக்கு உதவியுள்ளார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்து அவர்களைத் தேடிவருகிறது. இதனால் இந்த 2 விஞ்ஞானிகளும் பாகிஸ்தான் வேண்டுகோளுக்கிணங்க மியான்மர் நாட்டில்,அந்நாட்டின் ரகசியப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் உள்ள சாகெய்ங் நகரத்தில் ஒரு ரகசிய இடத்தில் அவர்கள் 2 பேரும் பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 பேரும் எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறைஅளித்த உத்தரவாதத்தின் பேரில் அவர்கள் இருவரையும் மியான்மருக்குள் கொண்டுவர அந்நாடுஅனுமதித்துள்ளது.
இவ்வாறு அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications