கேரளா மீது ராமதாஸ் கோபம்
மதுரை:
வெவ்வேறு மாநிலங்களுக்கிடையில் ஓடும் நதிகள் அனைத்தையும் தேசிய நீர்வளக் கமிஷனின் கட்டுப்பாட்டில்கொண்டு வரக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிற்ைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில்கோரிக்கை விடப்பட்டது. ஆனால் கேரள அரசு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
இதுகுறித்து அவர்கள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு ஒரு இன்டர்-ஸ்டேட் ஆறுஇல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அது தமிழ் நாட்டுக்கும் சொந்தமானது தான். அதை அவர்கள் உணரவேண்டும்.
எனவே தேசிய நீர்வளக் கமிஷன் இந்த விஷயத்தில் தலையிட்டு, வெவ்வேறு மாநிலங்களில் ஓடும் ஆறுகள்அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் இதை வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
தேசிய மின் உற்பத்திக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதைப் போலநதிகளும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்.
மேலும் அச்சங்கோவில், பம்பை ஆகிய ஆறுகளில் இருந்து தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் அடிலிநைனார்அணைக்குத் தண்ணீர் தர முடியாது என்று கேரள முதல்வர் ஏ.கே.அந்தோனி அறிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications