முறையான விசாக்களுடன் அமெரிக்கா வந்த கடத்தல்காரர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் விமானங்களை கடத்தித் தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் 19 பேரும்முறையாக விசா வாங்கியே வந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2 பேர் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் நாட்டையும், ஒருவர் எகிப்தையும், மற்றொருவர் லெபனானையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 14 பேர் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.மற்றவர்கள் கடந்த ஆண்டே அமெரிக்காவிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் வியாபாரம், சுற்றுலா மற்றும் படிப்பு ஆகிய காரணங்களுக்காக அமெரிக்காவிற்குவருவதாகக் கூறியுள்ளனர்.
இவர்களில் சதாம் அல் சுகாமி என்பவன் கடந்த மே மாதம் வந்துள்ளான். அவனுடைய விசா சரியாக செப்டம்பர்11ம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. இவன் வியாபார ரீதியாக இங்கு வந்ததாகத் தெரிவித்துள்ளான்.
இதேபோல நவாஸ் அல்ஹாஸ்மி என்பவனது விசாவும் முடிவடைந்துள்ளது. ஹானி ஹஞ்சர் என்பவன் கடந்தஆண்ட டிசம்பர் மாதம் படிப்பதற்காக இங்கு வந்துள்ளான். ஆனால் அவன் கல்லூரிக்கே செல்லவில்லை.
இந்த 19 பேரும் இங்கு வந்ததிலிருந்து நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாரும்அமெரிக்காவை விட்டு வெளியே செல்லவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அரேபியா மற்றும் முஸ்லீம் நாடுகளில் இருந்துஅமெரிக்காவிற்கு வர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு விசா வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை நிறுத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications