நீதிமன்றத்தில் சரணடைந்தார் சரவணபவன் ராஜகோபால்: சிறையில் அடைப்பு
காஞ்சிபுரம்:
ஜீவஜோதி என்ற ஏற்கனவே திருமணமான பெண்ணை மிரட்டி மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற பிரபலஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால் காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரும் அவரது ஆட்கள் 15பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் பல இடங்களில் சரவணபவன் என்ற பெயரில் ஓட்டல் நடத்திவருபவர் ராஜகோபால். இவருக்கு வள்ளியம்மாள் மற்றும் கிருத்திகா என்ற இரண்டு மனைவிகள் உண்டு. மூத்தமனைவிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஓட்டலுக்கு வேலை பார்த்து வந்த ஒருவரின் மனைவியான கிருத்திகாவைமுதலில் முருக்கு போட வேலைக்கு அமர்த்திய ராஜகோபால் பின்னர் அவரை இரண்டாம் தாரமாகமணந்துகொண்டார்.
இந்நிலையில் இவரது ஓட்டலில் மேனேஜராகப் பணிபுரிந்த ராமசாமி என்பவரின் மகள் ஜீவஜோதி என்றஇளம்பெண்ணின் அழகில் மயங்கி, அவரையும் அடைய ராஜகோபாபல் விரும்பினார். இதற்காக பெரும் பணஉதவியும் செய்துள்ளார். ஆனால் அந்தப் பொண்ணோ பிரின்ஸ் சாந்தக்குமார் என்பவரை காதலித்துத் திருமணம்செய்து கொண்டார்.
இருந்தாலும் ஜீவஜோதியின் மீது ராஜகோபாலின் காதல் மாறவில்லை. மாறாக ஜீவஜோதியை அன்பாகவும்,அதட்டலாகவும் மிரட்டி தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் அதற்கு மறுக்கவே,வெறுப்பான ராஜகோபால் தனது ஆட்களை வைத்து ஜீவஜோதியையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டிச்சித்திரவதை செய்துள்ளார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் ராஜகோபாலின் ஆட்கள் கடத்தி வைத்திருப்பதாகக்கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜீவஜோதி போலீசில் புகார் செய்ததையடுத்து, ராஜகோபால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். மேலும்இதுகுறித்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நடைபெற்று வருகிறது.
வரும் 26ம் தேதி ஜீவஜோதி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க உள்ளார். மேலும் ராஜகோபால் தன்னைக்கைது செய்யக் கூடாது என்று கோரி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நிராகரித்தநீதிபதி, ராஜகோபால் உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரைப் பிடிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் ஆலோசனைப்படி ராஜகோபாலும் அவரது ஆட்களும்தலைமறைவாக இருந்து வந்தனர். நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தவுடன் வெளியில் தலைகாட்ட இருந்தனர்.ஆனால், நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காததால் ராஜகோபால் காஞ்சிபுரம் ஜே.எம்.நீதிமன்றத்தில் நீதிபதி கோமதிமுன் சரணடைந்தார். அவரது மேனேஜர் சேது, வேலையாட்கள் சிலர் மற்றும் சில வக்கீல்களும் உடன் வந்தனர்.
அப்போது ராஜகோபால் நீதிபதியிடம் ஒரு மனுவ்ை தாக்கல் செய்தார்,
அதில், என் மீதும், எனது வியாபாரத்தின் மீதும் போட்டியும், பொறாமையும் கொண்ட சிலர் தூண்டுதலால்ஜீவஜோதி என்ற பெண் என் மீது புகார் கொடுத்துள்ளார். நான் எந்தத் தவறும் செய்யாதவன். நீதி கிடைக்கும்என்பதால்தான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜபோலின் மனுவை ஏற்ற நீதிபதி கோமதி, ராஜகோபால் உள்ளிட்ட பதினைந்து பேரையும் 15 நாள் காவலில்வைக்க உத்தரவிட்டார். அதன்படி, ராஜகோபால், சேது உள்ளிட்ட 15 பேரும் முதலில் காஞ்சிபுரம் சப்-ஜெயிலில்அடைக்கப்பட்டனர்.
பின்னர் ராஜகோபாலையும் மேனேஜர் சேதுவையும் சென்னை மத்திய சிறைக்கு மாற்றுமாறு நீதிபதி கோமதி உத்தரவிட்டார்.வெள்ளிக்கிழமை இரவே அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications