பெங்களூரில் தமிழக வங்கி ஊழியர் மனைவி, மகன் படுகொலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி ஊழியரின் மனைவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அவரது மகனும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொஙகவிடப்பட்டார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணியாற்றி வருபவர் ஜெகதீஷ். இவரது மனைவி லட்சுமிதேவி (30). மகன்கவுதம் (6).

இவர்களது வீடு பீனியாவில் உள்ள மல்லசந்திராவில் உள்ளது. இரு தினங்களுக்கு முன் ஜெகதீஷ் வங்கிக்குச்சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது அது பூட்டியிருந்தது. இதையடுத்து மனைவியும் மகனும் உறவினர் வீட்டுப்போயிருக்கலாம் எனக் கருதி நண்பர் வீட்டில் உறங்கிவிட்டு மறுநாள் காலை வந்தார்.

அப்போதும் வீடு பூட்டியிருக்கவே அண்டை வீட்டார் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.அங்கு லட்சுமிதேவி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மகன் கவுதம் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான்.

லட்சுமிதேவியின் தங்கத் தாலி பறிக்கப்பட்டிருந்தது. அலமாரியில் இருந்த ரூ.300ம் கொள்ளை போயிருந்தது.

தண்டுபாளையா கும்பல் செயலா?

கொலை நடந்திருக்கும் விதத்தைப் பார்த்தால் இது தண்டுபாளையா கும்பலின் செயலாக இருக்குமோ என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர். இக் கும்பல் ஆந்திராவைச் சேர்ந்தது. பெங்களூரின் ஊரகப் பகுதிகளில் இவர்கள்தங்கியிருந்து கொண்டு கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக் கும்பல் 10 ரூபாய்க்காகக் கூட கொலை செய்வது வழக்கம். பெண்களை கற்பழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொல்வது அவர்கள் மிகச் சாதாரணமாக செய்யும் செயலாகும். பகலில் தான் இந்தக் கும்பல் கொலைச் செயல்களில்ஈடுபடும்.

அக்கம் பக்கத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும் கூட வீடுகளில் சென்று தண்ணீர் கேட்பது போல உள்ளேநுழைந்து பாதக செயல்களில் ஈடுபடும். வழக்கமாக இக் கும்பலுடன் பெண்களும், குழந்தைளும் கூட வருவதுண்டு.அந்தப் பெண்கள், குழந்தைகள் முன்னிலையில் தான் வீட்டில் உள்ள பெண்களை உடன் வரும் கொள்ளைர்கள்கற்பழிப்பார்கள்.

பெங்களூரில் வீட்டில் தனியே இருக்கும் வயதானவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் தான் இந்தக் கொலைகள் நடக்கின்றன.

வயதான பெற்றோரை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்பவர்கள் நிம்மதியைத்தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் பட்டப் பகலில் ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தூக்கில்போடப்பட்டுள்ளான். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷ்னர் சோதனை:

கொலைகள் நடந்த வீட்டில் போலீஸ் கமிஷ்னர் சாங்லியானா நேரில் சோதனை நடத்தினார். இது தண்டுபாளையாகும்பல் செயலாகத் தான் இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+