குறளகம் தீ விபத்து: சினிமா டிக்கெட் விற்பனை பாதிப்பு
சென்னை:
சென்னை குறளகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சினிமா டிக்கெட் விற்பனையும்பாதிப்படைந்துள்ளது.
சினிமா டிக்கெட்டுகளில் தமிழக அரசின் சீல் வைக்கும் பணி குறளகத்தில் உள்ள வணக வரித் துறைஅலுவலகத்தில்தான் நடந்து வந்தது.
சினிமா தியேட்டரிலிருந்து தினமும் இங்கு வந்து டிக்கெட்டுகளின் பின் பக்கத்தில் சீல் வைத்துக் கொண்டு செல்வதுவழக்கம். சினிமா டிக்கெட்டுகளில் இந்த சீல் இருந்தால்தான் அது செல்லும்.
ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வணிக வரித் துறை அலுவலகம் எரிந்து சாம்பலானது. அங்குதற்போது எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இதையடுத்து சினிமா டிக்கெட்டில் சீல் வைக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில்வெளியிலிருந்து வரும் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் தியேட்டர்களில் எப்படி டிக்கெட்டை விற்பது என்று தியேட்டர் அதிபர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
டிக்கெட்டுகளில் சீல் வைக்கும் பணி மீண்டும் எப்போது துவங்கும் என்றும் தெரியாமல் தியேட்டர் அதிபர்கள்குழம்பிக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
