வீரப்பனுக்கு கன்னட சினிமா தயாரிப்பாளர்கள் கொடுத்த ரூ. 10 கோடி

Subscribe to Oneindia Tamil

சாம்ராஜ்நகர்:

ராஜ்குமாரை விடுவிப்பதற்காக வீரப்பன் கும்பலுக்கு கன்னட சினிமா தயாரிப்பாளர்கள் ரூ. 10 கோடி கொடுத்துள்ளவிவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ராஜ்குமாரை விடுவிக்க நக்கீரன் கோபால் எடுத்த தூது முயற்சிகள் தோல்வியடைந்தன. பலமுறை அவர் பலரைவீரப்பனிடம் இருந்து விடுவித்து வந்துள்ளார். ஆனால், ராஜ்குமாரை விடுவிக்க முடியவில்லை.

இதற்கு வீரப்பன் பெரிய அளவில் பணயத் தொகை கேட்டதே காரணம் என்று அப்போதே செய்திகள்வெளியாயின. ஆனால், இதை கர்நாடக, தமிழக அரசுகள் மறுத்தன.

காட்டுப் பகுதியில் குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கும் ராஜ்குமார் குடும்பத்தினருக்கும்தொழில்ரீதியில் உறவு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் கோடிக்கணக்கில் வீரப்பன் பணம் கேட்டு வந்தான்.

பின்னர் பழ.நெடுமாறன், பெங்களூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், டாக்டர் பானு ஆகியோர் எடுத்த முயற்சிகள்காரணமாக ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதாக இரு மாநில அரசுகளும் கூறின. ஆனால், இந்த விடுதலைக்காககர்நாடக சினிமா துறையினர் பல கோடிகளை வீரப்பனுக்குக் கொடுத்துள்ளனர்.

விரைவில் இது தொடர்பாக பல முக்கிய கன்னட சினிமா தயாரிப்பாளர்களிடம் தமிழக அதிரடிப் படையினர்விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.

ராஜ்குமார் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் பல கன்னட சினிமா தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள பல வங்கிக் கணக்குகளில் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதை கர்நாடக போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

சமீபத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் ஏகப்பட்ட பணம் புழங்குவதைக் கண்டுபிடித்த அதிரடிப்படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது வீரப்பனிடம் இருந்து பெரும் அளவிலான பணம் அவருக்குவந்ததை ஒப்புக் கொண்டார்.

அதே போல வீரப்பனின் கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தனின் அண்ணன் மாதையின் மனைவி அமராவதி மற்றும்அவரது தங்கை பார்வதியின் கணவர் அய்யாதுரையிடம் இருந்து ரூ. 5 லட்சத்தை அதிரடிப் படை போலீசார்கைப்பற்றினர்.

காட்டில் விறகு வெட்டி பிழைக்கும் இந்தக் கும்பலிடம் ரூ. 5 லட்சம் வந்தது எப்படி என்று விசாரணைநடத்தியபோது அது காட்டிலிருந்து வீரப்பன் அனுப்பியது என்று தெரியவந்தது.

வீரப்பனுக்கு நெருங்கிய நபர்களிடம் இருந்து இதுவரை ரூ. 12 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பணம்பதுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

ராஜ்குமார் விடுதலைப் பிறகு தான் வீரப்பனிடம் இருந்து இந்தப் பணம் வந்துள்ளது. எனவே, அவர் விடுதலைக்காககோடிக்கணக்கில் (அரசுக்கு தெரிந்தோ தெரியாமலோ) பணம் கைமாறியுள்ளது தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+