மீண்டும் விஷச் சாராயம்: காஞ்சிபுரம் அருகே பெண் உள்பட 3 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே விஷச் சாராயம் குடித்ததால் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 24 பேர்மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே தின்னம்பூண்டி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது.
சென்னை அருகே இரண்டு முறை கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் உயிரிழிந்த சம்பவத்திற்குப் பிறகும் இந்தகிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை குறையவில்லை. அதைக் குடிப்போரும் திருந்திய பாடில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில கூலித் தொழிலாளர்கள் சாராய பாக்கெட்டுகளைவாங்கிச் சென்றனர்.
அவர்களில் சவர நிாயகம், வேளாங்கண்ணி (பெண்), சின்னப்பன் ஆகியோர் இந்தச் சாராயத்தைக் குடித்த சிறிதுநேரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். 24 பேர் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த 24 பேரும் செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேர் வரை கவலைக்கிடமாக உள்ளதாககூறப்படுகிறது.
சம்பவம் குறித்த அறிந்த மாவட்ட எஸ்.பி. மாசானமுத்து, போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மதுவைவிற்ற செல்வராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுவில் விஷம் கலக்கவில்லை என்றும் அதிக அளவில் குடித்த காரணத்தால்தான் மூன்று பேரும் உயிரிழந்தனர்என்று மாசானமுத்து கூறியுள்ளார்.
ஆனால் போதை அதிகம் ஏறுவதற்காக சேர்க்கப்பட்ட வேதிப் பொருள் அதிக அளவில் சேர்க்கப்பட்டதால்தான்இந்தச் சாராயம் விஷமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications