சேலம்: சிறுவனை சித்ரவதை செய்த வளர்ப்புப் பெற்றோர்
சேலம்:
சேலத்தில் சிறுவன் ஒருவனை விரும்பித் தத்தெடுத்த தம்பதியினரே சித்தரவதை செய்ததால், அச்சிறுவன் தற்போதுபள்ளி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
திருச்சி மாவட்டம் ஓமாந்தூரைச் சேர்ந்த சேகர், சேலத்தைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோரின் மகன் பாலாஜி.பாலாஜி பிறந்தவுடன் அவனது தாய் தேன்மொழி இறந்துவிட்டார்.
இதனால் பாலாஜியின் தந்தை சேகர் தனது மூத்த மகளைத் தனது தாயிடமும், இளைய மகளை இலங்கையில் உள்ளதனது சகோதரியிடமும் வளர்க்கக் கொடுத்து விட்டார். தனது மகன் பாலாஜியை சேலத்தில் உள்ள அவனது சித்திசரோஜாவிடம் வளர்ப்பதற்காகக் கொடுத்துவிட்டு, சேகர் மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சரோஜாவிடம் சேலத்தில் வளர்ந்த பாலாஜியை 5 வருடங்கள் கழித்து, சரோஜாவின் தம்பிரவிச்சந்திரன், இந்திரா பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை இல்லாததால் வளர்க்க விரும்பினார்கள். இதனால்பாலாஜி சரோஜாவிடம் இருந்து அவர்களிடம் கொடுக்கப்பட்டான்.
இந்நிலையில் சிறுவன் பாலாஜியைத் தத்தெடுத்து 2 மாதங்களில் அவனை ரவிச்சந்திரனும் அவரது மனைவியும்சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். கண்ணம் உட்பட பல்வேறு இடங்களில் பாலாஜிக்கு சூடு போடப்பட்டுள்ளது.
இந்தச் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் பாலாஜி தான் படிக்கும் கொண்டலாம்பட்டி பள்ளியின் தலைமைஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளான். இனிமேல் நான் வீட்டுக்குப் போகமாட்டேன் என்றும் பள்ளியிலேயேதங்க என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தச் சிறுவன் கேட்டுள்ளான்.
இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியர், அன்னதானப்பட்டி போலீஸ் ஷ்டேஷனில் இதுகுறித்துப் புகார் செய்தார்.
போலீசார் சிறுவன் பாலாஜியிடமும், அவனைக் கொடுமைப் படுத்திய ரவிச்சந்திரன் தம்பதியரிடமும் விசாரித்துபுகாரை உறுதி செய்தனர். பின்னர் பாலாஜியை பள்ளி நிர்வாகப் பொறுப்பில் ஒப்படைத்ததோடு, அவனது அப்பாசேகருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications