பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பயணிகள் பஸ் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும்காயம் ஏற்படவில்லை.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்போராட்டம் நடத்தி வருகின்றனர். வத்தலகுண்டு பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் நடந்தன. இதுவரை 7 பஸ்கள் தீவைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பழனியிலிருந்து கம்பத்திற்கு சென்ற பஸ் வத்தலகுண்டு வந்தது. அப்போது பழைய வத்தலகுண்டுவிலக்கு பகுதியில் சிலர் பஸ்ஸை வழிமறித்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், ஒரு கும்பல் பஸ் மீது பெட்ரோல் குண்டை வீசியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் நிரப்பி திரி கொளுத்தப்பட்டிருந்த பாட்டில் பஸ் மீது விழாமல் தரையில் விழுந்து வெடித்துச்சிதறியது. இதையடுத்து அக்கும்பல் பஸ்சுக்குள் இருந்தவர்களை மிரட்டி கீழே இறங்கச் சொன்னது. அப்போது சிறிது தூரத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பெட்ரோல் குண்டு விழுந்தசப்தம் கேட்டு விரைந்து வந்தனர்.
இதைப் பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீஸார் விரட்டிச் சென்று 8 பேரைப் பிடித்தனர். பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியசெயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications